தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் அரசு பேருந்தும் மினி லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி லாரி ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........