பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு...!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய்
நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல் விலையில் ரூ.1-ம், டீசல் விலையில் ரூ.2-ம் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) திங்கள்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, தலைநகர் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60.09-க்கும் (முந்தைய விலை ரூ.61.09), டீசல் விலை ரூ.50.27-க்கும் (ரூ.52.27) விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்கு முன்பு கடந்த 1-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments