வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி STU கலந்தாய்வு கூட்டம்

 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 5-01 2016 செவ்வாய் மலை 5 மணிக்கு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி STU கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் ஹாஜி M முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்றது.

STU மாநில இணைச்செயலாளர் M முகம்மது பைசல் வரவேற்றார் மாவட்ட செயலாளர் ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் தஞ்சை வடக்கு தஞ்சை தெற்கு திருவாரூர் நாகை வடக்கு கரைக்கால் ஆகிய 5 மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் STU மாவட்ட அமைப்பாளர்கள் மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர்கள் மாநில MSF இணைச்செயலாளர்கள் 5 மாவட்ட ங்களின் மாநில பொறுப்பாள்ர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.


மாநில STU இணைச்செயலாளர் திருப்பூர் ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் மாநில STU செயலாளர் திருச்சி அல்ஹாஜ் GM ஹாஸிம் சிற்ப்புரை ஆற்றினார்கள் வழுத்தூர் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி S முஹம்மது செரீஃப் நன்றியுரை ஆற்ற அய்யம்பேடடை நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் மெளலவி அபூபக்கர் சித்திக் நன்றி கூறினார்


Post a Comment

0 Comments