இனிய இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 1437..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! அனைவருக்கும் இனிய முஹரம் (ஹிஜிரி-1437) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா,துல்-ஹஜ்.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன்9:36)
வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலியல்லாஹு அன்ஹு) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1436 வருடங்கள் சென்றுவிட்டது.1437-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்வதற்கு (அழைப்பு பணியில் ஈடுபட)திறமையை வளர்த்துக்கொள்ளவும், நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்...

Post a Comment

0 Comments