பயணத்தின் போது செய்ய வேண்டிய பிராத்தனை..!

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்

பின்னர்

ஸூப் ஹானல்லதீ சக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க பீ ஸப ரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மாத்தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸபரனா ஹாதா வத்வி அன்னா புக்தஹு, அல்லாஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு பிஸ் ஸபரி வல்கலீபத்து பில் அஹ்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின்
வக்ஸாயிஸ் ஸபரி வகாபதில் மன்ளரி வஸுயில் முன்கலபி பில் மாலி வல் அஹ்லி.

விளக்கம்

அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பி செல்பவர்கள். இறைவா! எண்களின்
இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம்.இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குக் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின்
சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும், குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்.
முஸ்லிம்-2392
பயணத்திலிருந்து திரும்பும் போது

இந்த துவாவை ஓதி விட்டு பிறகு

இந்த துவாவை ஓதவும்

ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா
ஹாமிதூன்.

விளக்கம்

எங்கள் இறைவனை வணக்கியவர்களாகவும், புகழ்ந்தவர்களகவும், மன்னிப்புக்
கேட்டவர்களாகவும் திரும்புகிறோம்.

முஸ்லிம்-2392

Post a Comment

0 Comments