Electrical and Electronics Engineering - முழுமையான தகவல்கள்

ஒவ்வொருவரின் வாழ்விலும் தினசரி உபயோகத்தில் உள்ள தொலைக்காட்சி, குளிர்விப்பான், மோட்டார், ஜெனரேட்டர் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் உற்பத்தி, செயல்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய படிப்பே இத்துறையினரின் ஆற்றலாகும். 

ஒரு நாட்டின் வளர்ச்சி அவ்விடத்தில் உள்ள மின்சார உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் அளவை பொறுத்தே அமைகின்றது. அத்தகைய மின் ஆற்றலின் தட்டுப்பட்டால் நாள்தோறும் சில மணி நேர மின்சார தடை அதன் மூலம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்படுவது தினசரி காட்சிகளாகின்ற தற்போதைய காலகட்டத்தில் அரசும் தனியார் துறையும் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் அதிக அளவில் இத்துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருகும் என்பதில் சிறுதும் ஐயமில்லை.

வருங்கால மின் உற்பத்தி தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான செயல் திட்டத்தின் வாயிலாக எலக்ட்ரிக்கல் பொறியாளர்களின் தேவைப்பாடு அதிக அளவில் இருக்கும். நாட்டில் அனைத்து தொழில் துறையும் மின்சாரத்தினை நம்பிருப்பதனால் அரசு துறை மட்டுமல்லாது தனியார் துறையினரும் காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் போன்றவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் தனது தேவைக்கும், மிதமானவை பொது உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுவதனால் வருங்காலத்தில் அதிக அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்புக்களும் உள்ளன. 

தமிழ்நாட்டில் சுமார் 465 மேற்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள எலக்ட்ரிகல் துறையில் சுமார் 29,850 இடங்களும், மாணவ, மாணவிகள் என இருபலரின் போட்டியில் இத்துறை தேர்வு செய்யப்படுவதும், இத்துறையின் சீரான வளச்சியும், துறையின் வேலை வாய்ப்புக்களும் தற்போதைய சூழ்நிலையில் இதன் தேர்வு மாணவர்களின் சரியான முடிவாகும். தமிழ்நாட்டில் பொறியில் சேர்க்கையில் 2006 ம் ஆண்டு 56% மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்த இத்துறையானது தற்பொழுது 2012ம் ஆண்டில் 91% மேலான இடங்களை நிரப்பப்பெற்றுள்ளது. மாணவர்களின் தேர்வின் அடிப்படையில் இத்துறை 2ம் இடத்திலிருக்கின்றது.

பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவையில் அளிக்கப்படும் சேன்ட்விட்ச் கோர்ஸ் எனப்படும் 5 வருட பொறியியல் பட்டப்படிப்பில் அதிக அளவிலான செய்முறை அறிவை பெறுவதன் வாயிலாக சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம். தற்பொழுது அதிக அளவில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப துறைகளும் கணினி துறை மாணவர்களுக்கு இணையாக எலக்ட்ரிக்கல் துறை மாணவர்களை பணிக்கு தேர்வு செய்வதன் மூலம் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.

சிறப்பான கல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு

1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 1930
2. ஏ.சி பொறியியல் கல்லூரி, காரைக்குடி - 1952
3. அரசு தொழிநுட்ப கல்லூரி, கோவை - 1952
4. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை - 1951
5. அரசு பொறியியல் கல்லூரி, சேலம் - 1966
6. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி - 1986
7. தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை - 1957

Post a Comment

0 Comments