கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலுமான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும் தேசிய தலைவர் இ. அஹமது சாஹிப் பேட்டி

சென்னை, ஜன 02- நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி யிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும் என அதன் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது சாஹிப் குறிப்பிட்டார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுக்குப்பின் செய்தியாளர் களை சந்தித்த இ. அஹமது சாஹிப் கூறியதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்று முக்கியத்து வம் வாய்ந்த முடிவுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் விடுதலை

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் அதை நிறைவேற்ற மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை மார்ச் மாதம் இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்த உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அற்ப காரணங் களுக்காக வும், காவல்துறைக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காகவும், பொய் வழக் குகள் புனையப்பட்டு இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறை வைக்கப் பட்டுள்ள முஸ்லிம் இளைஞர் களில் பெரும்பாலோனோர் குற்ற வழக்குகளில் எத்தகைய தொடர்பும் இல்லாதவர்கள். ஆய்வு செய்தவர்களும் இந்த உண்மையை வெளிபடுத்தி யுள்ளனர்.

எனவே அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் முஸ்லிம் லீக் நடத்தவுள்ள பேரணிகளிலும் இந்தக் கோரிக்கை பிரதானமாக வலியுறத்தப் படும்.

கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது. கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர் உடனடியாக விடுவிக்கப் பட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல்

நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யிலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும். மற்ற மாநிலங்களில் அதற் காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் 

இவ்வாறு இ. அஹமது சாஹிப் குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் கூட்டத் திற்கு ஏராளமான பத்திரிகை யாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் வருகை தநதிருந்தனர்.

Post a Comment

0 Comments