லால்பேட்டை,டிச 24- கற்பழிப்பு குற்றத்துக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்கும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு மதவாத சக்தி என்றும் லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் காதர் மொகிதீன் லால் பேட்i டயில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார். நிகழ்ச்சிகள்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மத் அலி அவர்களின் புதல்விக்கு ஜன வரியில் திருமணம் நடைபெறு வதை யொட்டி அவர்களின் இல்லம் சென்று மணமக்களை வாழ்த்தி துஆ செய்தார்.
பின்னர் லால்பேட்டையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர் பி.எம்.முஹம்மத் தைய்யுப் புதல்வி உம்மு அம்மாராவுக்கும் மௌலவி சௌகத் அலிக்கும் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்று தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் காதர் மொகிதீன் மண மக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் அன்று மாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.டெல்லியில் சமீபத்தில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப் படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி முரளி மனோகர் ஜோஷி போன்றவர் கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் என்றார்.
தூக்கு தண்டனை
இன்று இளம்பெண்கள் கற்பழிக்கப்படுவது அதிகரித் துள்ளது வேதனையளிக் கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம். கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் சொன்னபோது அதை காட்டுமிராண்டித் தனம் என்று பலர் சொன்னார்கள்.ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத் திருப்பதாகவே கருதுகிறோம். மதவாத சக்தியான ஜெயலலிதாவிடம் இருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை என்பதை அடிக்கடி கூறி வரு கிறோம்.ஆனால் சிலர் அதை மறைக்க முயல்வதை வேடிக் கையாகவே கருதுகிறேன்.
உயிருக்கு போராடிக் கொண் டிருக்கும் கோவை சிறைவாசி அபுதாகிரை நீதி மன்ற உத்தரவு வந்தபின்பும் பரோலில் விட மறுக்கும் தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது .
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமை யிலான கூட்டணியை தமிழகத் தில் ஆதரிப்பது என்றும் கேரளா வில் காங்கிரஸ் தலைமையி லான கூட்டணியை ஆதரிப்பது என்றும் முடிவு செய்துள்ளோம்
காவேரி தண்ணீர் பிரச்ச னைக்கு இரு மாநில முதல்வர் கள் மக்களின் நலன் கருதி சுமூக உடன்பாடு களுடன் பேசினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்
.பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யின் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான், கடலூர் மாவட்ட தலைவர் கே.ஏ .அமானுல்லா, செயலாளர் ஏ .சுக்கூர் , இளைஞர் அமைப்பாளர் தாஜுத்தீன், செய்தி தொடர்பாளர் ஏ.எஸ். அஹமத் , கௌரவ ஆலோசகர் அப்துல் கப்பார், சிதம்பரம் நகர தலைவர் முஹம்மத் அலி, செயலாளர் பைசல், பொருளாளர் ஷாகுல் ஹமித், லால்பேட்டை நகர தலைவர் அபு சுஹுல் , செயலாளர் அப்துல் அலி,பொரு ளாளர் ஏ .எம்.ஜாபர், ஏ .ஆர். அப்துல் ரசித் மற்றும் நிர்வாகிகள் பி.எம்.அப்துல் காதர், முகமத் ஆசிப், தாஹா முஹம்மத், மாவட்ட இளைஞர் அணி அமைப்பு குழு உறுப்பினர் மர்ஜூக் அஹமத் ,மாநில அமைப்பு குழு உறுப்பினர் முஹம்மத் அன்வர் .தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ், அஸ்கர் அலி, முபாரக் ,மாணவர் அணி முகமத் இஸ்மாயில் ,அஹமதுல்லா . உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்...

1 Comments
தவ்ஹீத் வாதிகளின் சிந்தனைக்கு...
ReplyDeleteஏற்றம் பெற்றவர்கள் என்று தங்களைத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு தாங்கள் செல்லும் பாதைதான் சரியான மார்க்கம் என்று சொல்லிக் கொள்ளும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்களின் சிந்தனைக்கு.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கோட்பாட்டுடன், சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று நித்தம் நித்தம் ஒவ்வொரு கொள்கையுடன் வாழ்வது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையா? எதற்கெடுத்தாலும் குர் ஆனையும், ஹதீஸையும் மேற்கோள் காட்டி பேசும் நீங்கள், வாக்குறுதி மீறலைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் சொல்லியிருப்பதை பார்க்கவில்லையா? அப்படி பார்த்திருந்தால்; அதன்படி நடக்க வேண்டும் என்று துளியாவது எண்ணமிருந்திருந்தால் தங்கள் காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக உறுதிமொழியை கையொப்பமிட்டு எழுதி கொடுத்துவிட்டு பின், திருமணம் நிறைவேறியவுடன் மீண்டும் தங்கள் இஷ்டம் போல் பழைய நிலைக்கு திரும்பி விடுவது வாக்குறுதி மீறுவதாகாதா? வாக்குறுதி மீறலுக்கு அல்லாஹ் தண்டிக்க மாட்டானா?
நமதூரில் தவ்ஹீத் ஜமாத்திற்கு வித்திட்டு அதன் கொள்கைகளை பரப்புவதற்கு பெரும் பொருள் செலவை செய்து வரும் ஒரு நபர், தான், தனது குடும்பம் என்று வரும்பொழுது கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுன்னத் வல் ஜமாத் முறைப்படி நடந்த திருமணத்தில் கலந்து கொண்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
மௌலூது என்றால் பிடிக்காது; ஆனால் மௌலூது ஓதி குடி புகு விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றது சொந்தம் கண்களை மறைத்ததினாலா? அப்பொழுது உங்கள் கொள்கை எங்கே போயிற்று?
சமீபத்தில் உங்கள் முறைப்படி நடந்த திருமணத்தில் பெண்ணின் தகப்பனாரிடம் சீர் வரிசையாக (நகையாகவோ, பணமாகவோ, பொருளாகவோ, சாப்பாடு வகைகளாகவோ) எதுவும் கொடுக்கவில்லை என்றும்; மாப்பிள்ளையிடம் மேற்சொன்னது போல் சீர் வரிசையாக எதுவும் வாங்கவில்லை என்றும் அல்லாஹ் மீது சத்தியம் வாங்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய பொய்! இதைப்பார்த்து ஊரே சிரிக்கிறது. பெண் வீட்டு சார்பாக என்னென்ன சீர் வரிசைகள் செய்தார்கள் என்பது ஊருக்கே தெரியும். பொய் சத்தியம் செய்பவர்கள் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் எச்சரித்திருப்பது உங்களுக்கு நினைவில்லையா? அதுவும் அல்லாஹ் மீதே பொய் சத்தியம் செய்வது உங்களுக்கு கேலி கூத்தாக உள்ளது.
மருதாணி சாப்பாடு ஆக்குவது நபி வழியா? நபி (ஸல்) அவர்கள் தங்கள் திருமணத்தின் போது மருதாணி சாப்பாடு ஆக்கினார்களா? அதற்கு ஆதாரம் உண்டா? நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் எந்த மனைவி திருமணத்திற்கு மறுநாள் “நாஷ்டா” செய்து கொடுத்தார்கள்? பெண் அழைப்பு நமது வீடுகளில் செய்தால் ..... அது கூடாது; அது நபி வழியல்ல. ஆனால் பெண் அழைப்பை “ரிபாஸ்” ஹோட்டலில் செய்தால் ...... அது கூடும்! “நபி வழி திருமணம்” என்று பத்திரிகையில் போட்டால் அது நபி வழியாகுமா? நபி (ஸல்) அவர்கள் எந்த திருமணத்திற்கு பத்திரிகை அடித்து கொடுத்தார்கள்? இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
இஸ்லாம் என்பது நாம் நினைத்தபடி வளைந்து கொடுக்கும் மார்க்கமல்ல. அது பரிபூர்ணமாக நிறைவு பெற்ற மார்க்கம். அதில் ஒரு புள்ளி வைத்து மாற்றம் காண்பதோ அல்லது கோடு போட்டு மாற்றம் செய்வதோ கோணங்கித்தனமான வேலையாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பதாக சொல்லிக்கொண்டு இப்படி குழப்பங்களை விளைவிப்பது நம் விரல்களைக் கொண்டு நம் கண்களையே குத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என நீங்கள் சிந்திக்கவில்லையா? - சுன்னத் வல் ஜமாத், வழுத்தூர் கிளை
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........