தமிழகத்தில் சாதி மோதல்களை தவிர்க்க ரத்தினவேல் பாண்டியன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி

நெல்லை, நவ.19- தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி மோதல்களை தவிர்க்க நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் தலைமை யிலான கமிஷன் ஏற்கனவே தயாரித்துள்ள பரிந்துரை களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் யோசனை தெரி வித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருநெல் வேலி சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். 

அப்போது அவர் கூறிய தாவது-

பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவு

பாராளுமன்ற தேர்தல் அணுகுமுறை உள்ளிட்டவை கள் குறித்து முடிவெடுப்பதற் காக முஸ்லிம் லீக்கின் அகில இந்திய கவுன்சில் கோழிகோட் டில் 2 நாள் கூடுகிறது .

இதில் அகில இந்திய அளவில் 400 பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்து கொள்கின்ற னர். கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுக்கான தேசிய நிர்வாகி கள் தேர்ந்து எடுக்கப்படுகின் றனர். மேலும் வரும் பாராளு மன்ற தேர்தல் அணுகுமுறை குறித்த ஆலோசனை மற்றும் இயக்கத்தை வடமாநிலங்களில் வலிமைப்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன. தேசிய அளவில் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநாடு நடத்து வது குறித்து முடிவு செய்யப் படும்.

ரத்தினவேல் பாண்டியன் கமிஷன் பரிந்துரை

தமிழகத்தில் சாதி மோதல்கள் நடைபெறுகின்றன. இவற்றை தவிர்க்க நீதியரசர் ரத்தினவேல்பாண்டியன் தலை மையிலான கமிஷன் ஏற்கனவே பரிந்துரை செய்த பரிந்துரை களை நடைமுறைப்படுத்த வில்லை. இனி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப பூங்கா

தென்பகுதியில் தொழிற் சாலைகளை உருவாக்க வேண்டும். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தொடங்கி வைத்த நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல் படுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். இதனால் சாதி மோதல்கள் குறையும். 

சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம்

மின்தடையால் இட்லிமாவு தயாரித்து விற்கும் தொழிலா ளர்கள் முதல் அனைத்து தொழில்களும் நலிவடைந்து விட்டன. மின் தடையால் தொழில் இழந்தவர்கள் வேலை தேடி வெளிமாநிலத்திற்கு செல்லும் நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் பல புதிய திட்டங்களுக்கு பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கும் நிலையில் மின்தடையை குறைக்கவும், அதிக நிதி ஒதுக்கி அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசைவம் குறித்த பாடம்

சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் நாடார் சமுதாயம் குறித்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவலை மத்திய அரசு நீக்க ஒப்புக்கொண்டதுபோல் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாட புத்தகத்தில் அசைவம் சாப்பி டுபவர்கள் மந்த புத்தி உள்ள வர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிதியுதவி

தொடர்ந்து அவர் மேலப்பாளையத்தை சேர்ந்த ஏழை மாணவர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவிதொகை வழங்கினார்.

பேட்டியின்போது பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநிலப் பொரு ளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம். கோதர் முகைதீன், வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் நெல்லை மஜீத், கமுதி பஷீர், கே.எம். நிஜா முதீன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர்கள் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய் யது முஹம்மது, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செய லாளர் மில்லத் இஸ்மாயில், மேலாளர் இப்ராஹீம் மக்கீ, 

மாநில இளைஞர் லீக் இணைச் செயலாளர் எம். முஹம்மது அலி, மாவட்ட துணைத் தலைவர் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி எம். சாகுல் ஹமீது, இராம நாதபுரம் முஹம்மது யாகூப், மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது இப்ராஹீம், மேலப் பாளையம் ஒய். சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந் தனர்.

Post a Comment

0 Comments