முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் திரைப்படம் மத அமைதியை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்து சென்னை தூதரகத்தில் முஸ்லிம் லீக் மனு

அமெரிக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர் களை இழிவுபடுத்தும் வகை யில் எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு மதத்தின ரிடையே நிலவும் அமைதி யான சூழ்நிலையை கெடுப்பவர்கள் மீது அமெ ரிக்க அரசு கடுமையான நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வுக்கு கோரிக்கை விடுத்து சென்னையில் உள்ள அமெ ரிக்கத் தூதரக அதிகாரி (கவுன்சில் ஜெனரல்) ஜெனீபர் மிக் இன் டைர் அம்மையாரை சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டனம் மற்றும் கோரிக்கை மனு ஒன்று நேரில் வழங்கப்பட் டுள்ளது. 

`தி இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் `தி டெசர்ட் வாரியர்’ என்ற ஒரு படத்தை தயாரித்தார். படம் தயாரித்து முடிந்ததும் அதில் இடைச்செருகலாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் வகையில் சில காட்சி களை இணைத்தார். அந்தப் படத்தின் முன்னோட்டம் `தி இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’ என்ற பெயரில் இணைய தளங்களில் வெளி யிடப்பட்டது. இதனால் உலக முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட் டம் வெடித்தது.

போராட்டத்தின் போது அமெரிக்க தூதர் ஒருவர் கொல்லப்பட்டார். பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதர கங்கள் முன் போராட்டங்கள் வெடித்தன. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் முன்பும் போராட் டங்கள் நடைபெற்றன. 

சந்திப்பு

இந்தச் சூழ்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியபொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. இருவரும் இன்று காலை சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஜெனீபர் மிக் இன்டைர் அம்மை யாரை சந்தித்துப் பேசினர். 

இந்தியாவின் பன்முக கலாச்சாரம், மத நல்லிணக்கம், ஜனநாயக ரீதியில் கூட்டணி ஆட்சி முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர்கள் அமெரிக்கத் தூதர்களுடன் பேசினார்கள். ஒரு மணி நேரத் திற்கும் மேல் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சின் போது அமெரிக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் குறித்தும் விவாதித்தார்கள். 

இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், எம். அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட மனு ஒன்று அமெரிக்க கவுன் சில் ஜெனரலிடம் அளிக்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் பராக் எச். ஒபாமா முகவரியிட்டு தயாரிக் கப்பட்ட அந்த மனுவில் கூறி யிருப்பதாவது-

வன்முறை கிளர்ச்சிகள்

உங்களது மேலான கவனம், பொறுமையான பரிசீலனை மற்றும் திருப்தியான மேல் நடவடிக்கைகளுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில சார்பில் இந்த மனுவை அளிக்கிறோம்.

அமெரிக்காவில் கலி போர்னியா மாநிலத்தில் குற்றப் பின்னணி உள்ள துவேஷம் நிறைந்த ஒரு நபரால் இஸ்லாத் துக்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவண திரைப்படம் உலகளவில் இஸ்லாமியர்களை பாதித்து அதன் காரணமாக அமெரிக்காவிற்கு எதிராக வெறுப்பும், துவேஷமும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட கட்டுக் கடங்காத போராட் டங்கள் அந்த திரைப்படத்திற்கு எதிராக எழுந்த போது, நான்கு அமெரிக்கர்கள் தங்களுடைய விலை மதிக்க முடியாத இன்னுயிர்களை இழக்க நேரிட் டது.

கட்டுக்கடங்காத அந்த போராட்டக்காரர்களால் ஏற் படுத்தப்பட்ட கொடுமையான நிகழ்வுகளை நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம். அதற்காக நாங்கள் உண்மை யில் வருந்துகிறோம். உயிரிழந் தவர்களுக்கு எங்கள் இதயப் பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு ஏற்பட்ட துக்கம், துயரம் ஆகியவற்றில் நாங்கள் பங்கு பெறுகிறோம்.

சென்னை தூதரகம்

சில நாட்களுக்கு முன்பு அந்த திரைப்படத்திற்கு எதிராக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், சில இளைஞர் கள் அத்துமீறி நடந்து கொண்ட தற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்.

சர்ச்சையை கிளப்பிய அந்த திரைப்படத்திற்கும், அமெரிக்க அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். அமெரிக்க அதிபரான தாங்கள் ஒரு அறிக்கையில் அந்த படத் தயாரிப்பாளரை கடுமையாக கண்டித்திருந்தீர் கள். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அம்மையார் அந்த படத்தின் காட்சிகள் மற்றும் அது வெளிப்படுத்தும் செய்தி ஆகியவற்றை கடுமையாக மறுத்திருந்தார். 

ஒரு பெரிய மதத்தை இழிவுபடுத்தவும், அதன் மூலம் கோபத்தை கிளறி விடவும், அந்த திரைப்படம் தயாரிக்கப்பட் டிருப்பதாகவும், அதற்கு ஆழ்ந்த துவேஷ நோக்கம் இருப்பதாக வும் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியிருந்தார். 

இவற்றிற்கும் பின்னரும் கூட அந்த மட்ட ரகமான படம் இண்டர் நெட்டில் தொடர்ந்து காட்டப் பட்டு வருகிறது. அந்த படத்தை தயாரித்தவர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சிறையில் இருப் பதை தற்போது நாங்கள் அறிந்துள்ளோம்.

உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம் களின் மன அமைதியை அழித்து விட்ட இந்த படத் தயாரிப்பாளர் உலக முஸ்லிம் களின் மத உணர்வுகளை புண்படுத் தியதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். மக்க ளிடையே மத உணர்வை புண்படுத்துபவர்களை சிறை யில் அடைக்க அமெரிக்காவில் எந்த சட்டமும் இல்லை என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அமெரிக்கா தனி மனிதர்களின் பேச்சுரி மைக்கும் - எழுத்துரி மைக்கும் அதிக அளவில் சுதந்திரம் அளித்துள்ளது. 

கடும் நடவடிக்கை எடுங்கள்

எங்கே ஒரு மனிதனுடைய மூக்கு ஆரம்பமாகிறதோ அங்கே மற்றவனுடைய சுதந்திரம் முடிவுக்கு வருகிறது என்ற பிரசித்திப் பெற்ற பழமொழியை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம். உலகி லேயே மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாகிய நமது இரு தேசங்களும் மதச்சுதந்திரம், நம்பிக்கை, வழிபாடு ஆகியவை மிக உயர்ந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. அந்த அடிப்படை சுதந்திரம் காயப் படுத்தப்படும் போது மதச்சுதந் திரத்தின் அடித்தளம் அகல பாதாளத்திற்கு சென்று விடுகிறது. 

பல மதங்கள், பல கலாச் சாரங்கள், பல மொழிகள் ஒருங்கிணைந்து பன்முக கலாச்சார ஒற்றுமையில் திளைக் கும். இந்தியாவில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல்வேறு மத மக்களிடையே நிலவி வரும் அமைதியான சூழ்நிலையை சேதப்படுத்து பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி தங்களையும், அமெரிக்க அரசையும் நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லோருக்கும் அமைதி, நல்லிணக்கம், நீதி ஆகிய வற்றை வழங்கும் வகையில் நீங்கள் சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வரவிருக்கிற அதிபர் தேர்தலில் தாங்கள் பெரிய வெற்றியடைய நாங்கள் எங்கள் விழைவை தெரிவித்துக் கொள்கிறோம்.

தனிப்பட்ட முறையில் நாங்கள் உங்களின் அபி மானிகள். தங்களது அலுவல கமான ஓவல் ஆபிசில் விரை வில் சந்திக்கும் நல்வாய்ப்பை எதிர்பார்க்கி றோம். தங்களுக் கும் தங்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் நல்ஆசிகளை வழங்குவானாக. 

மேற்கண்டவாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன், எம். அப்துல் ரஹ்மானும் கையெழுத்திட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments