செப்டம்பர் 8 சனிக்கிழமை தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடந்தை வருகின்றனர் இ. யூ. முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுப் பணிகள் உச்சகட்டம்

செப்டம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை கும்பகோ ணத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தமிழக முழுவதிலுமிருந்து பல்லாயி ரக்கணக்கானோர் பங்கேற்க வருகை தருவ தாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இம்மாநாட்டுப் பணிகள் உச்ச கட்டத்தை அடைந் துள்ளன பிரச்சாரப் பணி களும் அழைப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன.

கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் அதற்காக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்த வேண்டும் 

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5 சதவீதமாக இட ஒதுகீட்டை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக் கைகளை வலியுறுத்தியும், இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம் சமுதாயத்தை முழுi மயாக சென்றடைய வழி வகை காணப்படவேண்டும் என்ப தோடு சமுதாயத்தில் இளைய தலைமுறைக்கு மத்தியில் கல்வி வேலை வாய்ப்பு குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணத்தில் செப்டம்பர் 8 சனிக்கிழமை நடைபெறும் இம் மாபெரும் மாநாட்டில் கருத் தரங்கு , பிறைகொடி பேரணி, மத்திய மற்றும் கேரள மாநில அமைச்சர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் சிறப்புறையாற்றும் மாநாடு, கண்காட்சி, நூல் வெளியீடு என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகம் குடந்தையில் திரளுகிறது

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சமுதாய பெருமக்களும் தாய்ச் சபை செயல் வீரர்களும் இளை ஞர்களும், மாணவர்களும் இம்மாநாட்டில் பல்லாயிரக்கண க்கில் பங்கேற் கின்றனர்.

நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் புளியங்குடி, தென்காசி, மேலப்பாளையம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களி லிருந்து ஏராளமானோர் வருகை தரும் செய்திகளும், 

கடலூர் மாவட்டத்திலிருந்து எண்ணற்ற வாகனங்களில் இம் மாநாட்டிற்கு வருகை தரும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. விழுப்புரம் கிழக்கு, மேற்கு மாவட்டங்களிலிருந்து ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வாக னங்களில் வருகை தர உள்ளனர் இதற்கான ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் தலைமையில், மேற்கு மாவட்ட தலைவர் ஏ.எம். சித்தீக் அஹமது முன்னிலையில் நடை பெற்றது.

மாநில பொதுக்குழு உறுப் பினர்கள் கோட்டகுப்பம் வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், விழுப் புரம் கே.எம். ஷேக் தாவூது, விழுப்புரம் டி. சுல்தான் மொய்தீன், ஜி. சகாயராஜ், பிரியம் தாரிக், அப்துல் மாலிக் சுகர்னோ, உளுந்தூர்பேட்டை அப்துல் ஹாதி கோட்டகுப்பம் ஏ.அமீர் பாஷா, முஹம்மது இல்யாஸ், பிலால் முஹம்மது, விழுப்புரம் சலாமத்து உசேன், டி.சாகுல் ஹமீது, எம்.அப்துல் கனி, தஸ்தகீர், செஞ்சி சையது கலீல், சங்கராபுரம் ரஷீத் கான், லியாகத் அலி, தஸ்தகீர், ஜாகீர் உசேன் திருக்கோவிலூர் ஆலம் கான், திண்டிவனம் கமாலுதீன், செஞ்சி சபியுல்லாஹ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர்.

விழுப்புரம் கிழக்கு மேற்கு மாவட்டங்களில் இருந்து ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் மாந hட்டில் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட இளைஞர் அணியினர் உற்சாகம் 

கல்வி விழிப் புணர்வு மா நாடு தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளை ஞரணி யினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி யுள் ளது இதற்கான ஆலோ சனை கூட்டம் அய்யம்பேட்டை ஆமி னா பள்ளிவாசலில் நடை பெற் றது. 

கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சிம்லா நஜீப் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜி யார் , பொருளாளர் மதுக்கூர் அப்துல் காதர், முன்னாள் தலைவர் குலாம் மைதீன் ஹாஜியார் முன்னிலை வகித் தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் மோதின் அப்துல் நசீர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை தலைவர் அதிரை நசீருதீன், தலைமை நிலைய பேச்சாளர் ஜைனுலாபுதீன் சிறப்புரை நிகழ்த் தினர். மாநில கல்வி பனி செயலாளர் ஆடுதுறை ஷாஜ ஹான் கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விளக்க உரை ஆற்றினார். விழாவில் ஆலி மான் ஜியா வுதீன், வழுத்தூர் தாஜுதீன், ஆடுதுறை ஜமால் முஹமது இப்ராகிம், முஹம்மத் ஹுi சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாஜஹான், பாப நாசம் ஒன்றிய அமைப்பாளர் தௌபிக் அஹமது, மாணவர் பேரவை இணைசெயலாளர் மக்கி பைசல் உள்பட பலர் கலந்துகொண் டனர்.

கும்பகோணம் கல்வி விழப்பு ணர்வு மாநாட்டுக்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து பல்ல hயிரக்கணக்கான இளை ஞர்களை பங்கேற்கச் செய்வ துதென்றும் பாபநாசம் ஒன்றி யத்தில் இருந்து மட்டும் 50 வாகனங்களில் இளைஞர் களும் மாணவர்களும் கலந் துகொள் வதெனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் பண்டா ரவாடை தாவூத் பாட்சா நன்றி உரை ஆற்றினார்.

பிரச்சாரப் பணி தீவிரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி தஞ்சை, திருவா ரூர்,நாகை வடக்கு, நாகை தெற்கு, காரைக்கால், மற்றும் கடலூர் மாவட்டங்களில் பிச்சா ரம் செய்வதற்காக தனி வாக னம் பயன்படுத்தப்பட்டு வரு கிறது .

நேற்றும் இன்றும் நாகை வடக்கு மாவட்டத்தில் மயி லாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி, கொள்ளிடம், தைக்கால் , திருமுல்லை வாசல், மணி கிராமம், புத்தூர்,

ஆக்கூர், தரங்கம்பாடி, பொறையார், ஆயப்பாடி, திருக் கலாச்சேரி, கூத்தூர், எடுத் துகட்டி சாத்தனூர், சங்கரன் பந்தல், கிளியனூர், எலந்தங்குடி, நீடூர் உள்ட்ட ஊர்களிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் பிச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான ஒலிப்பதிவு நாடா தலைமை நிலையத்திலிருந்து அனுப்பட்டுள்ளது.

மாநில பேச்சாளர் கொள் ளிடம் ரஷீத் ஜான் , மணி கிர hமம் முஜீபுர் ரஹ்மான் , ஆய ப்பாடி ஹாஜி, இதனை ஒருங் கிணைத்து செல்கின்றனர்.



Post a Comment

0 Comments