திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா தஞ்சை மாவட்ட செயலாளர் அ.பஷீர் அஹமது விருதினை பெற்றார்


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் ஆண்டு சந்திப்பு விழா கல்லூரி முதல்வர் டாக்டர்.ஆர்.காதர் மொகிதீன் தலைமையில் என்.பி.அப்துல் கபூர் ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வருகைப்புரிந்த அனைவரையும் கல்லூரி துணை முதல்வர் பி.என்.பி.முஹம்மது சஹாபுதீன் அன்புடன் வரவேற்றார்.
தஞ்சை மாவட்ட செயலாளர், வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளர், பண்ணாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டத் தலைவர் லயன் .பஷீர் அஹமது அவர்களுக்கு DISTINGUISHED ALUMNUS AWARDEES என்ற சிறப்புமிக்க விருதினை பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மாண்புமிகு டாக்டர்.கே. மீனா வழங்கினார்.





Post a Comment

0 Comments