இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் - ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1,14,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் - முன் பணமாக அரசுக்கு ரூபாய் 51,000 செலுத்த இறுதி தினம் ஜூன் 11 என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் - தேர்வானவர்கள் பயணம் மேற்கொள்ள விருப்பம் இல்லாமல் திரும்பி தந்த இடங்களுக்கு - Waiting List பட்டியலில் இருந்தவர்களுக்கு இடம் வழங்கப்பட்டு - அவர்களும் முன்பணம் செலுத்த ஜூன் 30 இறுதி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இறுதி தினங்கள் தாண்டிய பின்னரும் - சுமார் 4000 பேர் இதுவரி முன்பணம் கட்டவில்லை என இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. அவர்களின் விபரம் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் (www.hajcommittee.com) வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு முன்பணம் கட்டிய பின்னரும், கட்டாதோர் பட்டியலில் பயணியர் பெயர் இடம்பெற்றிருந்தால் - அவர்கள் உடனடியாக அலுவலர்களை தொடர்புகொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மேலும் - இது வரை முன்பணம் கட்டாதோருக்கான இறுதி தினம் தற்போது ஜூலை 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி - எக்காரணம் கொண்டும் மீண்டும் தளர்த்தப்படாது என்றும், இந்த தேதிக்குள் முன்பணம் செலுத்தாதோர் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு, Waiting List பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்றும் மேலும் இந்திய ஹஜ் குழுவின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........