வரலாற்றுப் பேரியக்கத்தின் 65-ம் ஆண்டு தின விழா: தஞ்சை மாவட்டம் வரலாறு படைத்தது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 65-வது வருட துவக்க நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் எழுச்சி மிக்க பச்சிளம் கொடியேற்று நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

முதல் நிகழ்ச்சியாக தஞ்சை மாவட்ட தலைமை அலுவலகமான கொள்ளபேட்டை தெரு சொந்தக் கட்டிடத்தின் முன் 9-ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது. தஞ்சை மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது கொடியேற்றினார்.

விழாவில் மாநில செயலாளர் .எம். ஷாஜஹான், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம் மது இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் சிம்லா நஜீப், மாநில தலைமை நிலைய பேச்சாளர் எஸ்.எம். ஜெயினுல் ஆபிதீன், மாவட்ட துணைச் செயலாளர் பி. நூர் பாட்சா, நகரத் தலைவர் ஆர். ராஜ் முஹம்மது, நகரப் பொறுப் பாளர்கள் முத்தலீப், ஷாஜ ஹான், ஜமால் முஹம்மது, காயிதெமில்லத் பேரவை சார்ந்த ராஜா முஹம்மது, மாவட் டப் பிரதிநிதி தாவூத் பாட்சா, நகர இளைஞர் அணியைச் சார்ந்த சாதிக், பஷீர், சித்தீக், உமர், ஒலி முஹம்மது மற்றும் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையில் ஜமாஅத்தார் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

மதுக்கூரில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளர் .எம். அப்துல் காதர் தலைமை தாங்கினார். விழாவில் மாநில செயலாளர் .எம். ஷாஜஹான் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.



நகரத் தலைவர் எஸ்.என்.எச். ஜின்னா, செயலாளர் எஸ். முஸ்தபா, பொருளாளர் அப்துல் அஜீஸ், முஹம்மது ஃபாருக், அப்துல் கரீம், எஸ்.பி.என். காதர் - அமீர் அலி, அக்பர் அலி, ரபி அஹமது, ஜமால் மைதீன், முஹம்மது அலி, முஹம்மது முஸ்தபா, அப்துல் அஜீஸ், ஆடுதுறை, .எஸ். உசேன், எம்..ஜே. முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் கே.கே. ஹாஜா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது கொடியேற்றினார்.


எம்..ஜே. முஹம்மது இப்ராஹீம், கவிஞர் தாஹா, இளைஞர் அணி சாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது, கே.எஸ்.. அப்துல் ரஹ்மான், அபூபக்கர், . சேக் அப்துல்லா, முன்னாள் செயலாளர் எம்.. முஹம்மது சாலிஹ், முஹம்மது அலீம், எஸ்.எம். அக்பர் ஹாஜியார், என்.எம். அமானுல்லாஹ், முஹம்மது கமால்தீன், எம்.கே. இப்ராஹீம், எஸ். சஹாபுதீன், எஸ். சாலிஹ், ஜாபர் அலி, . ஷேக் தாவூது, என். அஜ்மல்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மல்லிப்பட்டினத்தில் கொடி யேற்றும் நிகழ்ச்சி ஜும்ஆ பள்ளிவாசல் எதிரில் நடை பெற்றது. முன்னதாக ஜும்ஆ பேருரை மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நஸுருதீன் நிகழ்த்தினார்.

விழாவில் கலந்து கொண்டு இயக்க பிறைக்கொடியை மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஏற்றினார். மாநில செயலாளர் .எம். ஷாஜஹான் சிறப்புரையாற்றி னார்.

செம்பைபட்டினத்தில் மாநில செயலாளர் .எம் ஷாஜஹான் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

செந்தழைப்பட்டினத்தில் பொதுக் கூட்டமும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது தலைமை தாங்கினார். நகரத் தலைவர் . அப்துல் ஹமீது வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன், மாநில செயலாளர் .எம். ஷாஜஹான், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மாநில தலைமை நிலைய பேச்சாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், மாநில இளைஞர் அணி துணை செயலாளளர் அப்துல் முனாப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதிரை கே.கே. ஹாஜா, மாவட்டப் பொருளாளர் .எம். அப்துல் காதர், திரை சேக் அப்துல்லா, பண்டாவாடை ராஜா முஹம்மது, மாவட்ட துணைச் செயலாளர் சிம்லா நஜீப், ஆடுதுறை . உசேன், எம்..ஜே. முஹம்மது இப்ராஹீம், செந்தழை நகரப் பொறுப்பாளர் கள் ஜமாஅத் தலைவர் ஹமீது சுல்தான், முகைதீன் அப்துல் காதர், எம்.எஸ். ஹமீது சுல்தான், கே.எஸ். முஹம்மது அப்துல்லா, எம். அப்துல் ஜப்பார், வி.எஸ். அபுசாலிஹ், நாகூர்பிச்சை, தாவூது உமர், வி.எம். அப்துல் ரஹ்மான், எம்.. ஜாகீர் உசேன் (ஊராட்சி மன்றத் தலைவர்) ரபீக், அப்துல் ரஜாக், எஸ். ஜாகீர் உசேன், அளப்துல் கலாம், முஹம்மது அலி, எம்.. இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் நைனா முஹம்மது நன்றி கூறினார்.

மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது பச்சிளம் பிறைக்கொடி ஏற்றினார்.

10-3-2012

10-
ம் தேதி காலை 8.30 மணியளவில் ஆடுதுறை மஸ்ஜிதெ முபாரக் அருகில் இருக்கும் கொடிக் கம்பத்தில் பிறைக்கொடியனை ஏற்றிவிட்டு 9 மணியளவில் ஆடுதுறை பேருந்துநிலையம் முன்பு அமைந்துள்ள கொடி கம்பத்தில் கொடியினை ஏற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜி முஹம்மது, ஆடுதுறை நகரச் செயலாளர் . ஷேக் அலாவுதீன், நகர துணைச் செயலாளர் எஸ். ரியாஸ் அஹமது, ஜமாஅத் நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவர் பேரவை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தொடர்ந்து திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட குழுவினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருமங்கலக் குடிக்கு சென்ற மாவட்டக் குழுவினர்களை மாவட்ட துணைத் தலைவர் எம். முஹம் மது சுலதான் தலைமையில் நகரத் தலைவர் .எம். சாஹுல் ஹமீது ரஷாதி, செயலாளர் . அப்துல் மாலிக், பொருளாளர் எம். அப்துல் ஹமீது, துணைத் தலைவர்கள் கே.எம். ரஹ்மத் துல்லா, எஸ். முஹம்து பாருக், எம். ஜலாலுதீன் பைஜி, துணைச் செயலாளர்கள் கே.. ஹபீபுர் ரஹ்மான், எம். ரஹ்மத்துல்லா, எம். ஹபீப் ரஹ்மான், மாவட்டப் பிரதிநிதி .கே. ஷேக் அலாவுதீன் மற்றும் ஜமாஅத் நாட்டாண்மைகள், தொண் டர்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர்.

திருமங்கலக்கடி காட்டு களம் கடை வீதியிலும், பெரிய iத் தெரு மார்கெட் அருகிலும், சின்ன தைக்கால் பஸ் நிலையம் அருகிலும் கொடியினை ஏற்றி பின் மாநில செயலாளர் ஆடுதுறை .எம். ஷாஜஹான், மாவட்டச் செய லாளர் லயன் பஷீர் அஹமது ஆகியோர் உள்ளூர் தொலைக் காட்சி நிறுவனத்திடம் முஸ்லிம் லீகின் வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

காலை 11.30 மணிக்கு திருப்பனந்தாள் சென்ற மாவட்ட குழுவினர்களை திருப்பனந்தாள் ஒன்றிய அமைப்பாளர் .எச். இஸ்ஹாக் தலைமையில் எம். முஹம்மது அலி, எம்.எஸ். ஜாபர், முஹம்மது சுல்தான், எஸ்.என். முஹம்மது அலி, எச். ஹலீல் ரஹ்மான், முஹம்மது பாருக், அஷ்ரப் அலி, முஹம்மது அலி, மன்சூர் அலி, மாணவர் பேரவை கே முஹம்மது அக்ரம் ஆகியோருடன் நிர்வாகிகள் வரவேற்றனர். திருப்பனந்தாள் யூனியன் ஆபிஸ் அருகில் அமைந்த கொடிக் கம்பத்தில் கொடியினை ஏற்றி சோழபுரம் சென்றனர்.

சோழபுரம் மெயின் ரோட்டில அமைக்கப் பெற்றிருந்த கொடிக் கம்பத்தில் பகல் 12 மணியளவில் மாவட்ட துணைச் செயலாளர் லியாகத் அலி, பள்ளியின் இமாம்கள் ஷபீகுர் ரஹ்மான், டி. மக்தாதுல் ஹசன் தாவூதி, மேலத் தெரு நாட்டாண்மை ஜவஹர் அலி, உதவி நாட் டாண்மை ஷேக் அலாவுதீன் மற்றும் திரளாக கலந்து கொண்ட தொண்டர்கள் சூழ பச்சிளம் பிறைக்கொடி ஏற்றப் பட்டது.

அம்மா பள்ளி தைக்கால் மெயின் ரோட்டில் அமைந்திருந்த கொடி கம்பத்தில் பகல் 1.30 மணியளவில் லுஹர் தொழு கைக்குப் பின் நகரப் பொறுப்பாளர் .எம். ஷாகுல் ஹமீது தலைமையில் இளைஞர் லீக் உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, முஹம்மது ரபீக், அமீருதீன், இம்ரான்கான், ஷபீர் அஹமது, முஹம்மது பைஸ் மற்றும் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் பிறைக் கொடி ஏற்றப்பட்டது.

மாலை 4.30 மணியளவில் கண்டியூர் மெனான் நோட்புக் - எஸ். அன்சாரி, ஷாகுல் ஹமீது, ஹாஜா மைதீன், கலீபுல்லா, பக்கீர் மைதீன், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹீம், தவக்கல் பாட்சா மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பிறைக்கொடி ஏற்றி வைக் கப்பட்டது. திருப்பந்துருத்தியில் அஸர் தொழுகைக்குப் பின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.. ஷேக் அலாவுதீன், நகரத் தலைவர் எம். அப்துல் பாஸித், செயலாளர் . முஹம்மது காஸிம், பொருளாளர் எம். முஹம்மது இப்ராஹீம், ஜமாஅத் தலைவர் எஸ்.எம். தவக்கல் பாட்சா, துணைத் தலைவர் படே ஷா, முஹம்மது காஸிம ஆகியோர் தலைமையில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பிறைக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்டக்குழு புறப்பட்டது.

மில்லத் நகரில் மாவட்ட முன்னாள் தலைவர் எம்.. குலாம் மைதீன், நகரத் தலைவர் எம்.. முஹம்மது, செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் . முஹம்மது ஷெரீப், மாவட்டப் பிரதிநிதி . முஹம்மது தாஜுதீன், இளைஞர் லீக் பாஷா, கலந்தர் மற்றும் நாட் டாண்மை ஜின்னா ஆகியோ ருடன் ஜமாஅத்தார்கள், தொண்டர்கள் முன்னிலையில மில்லத் நகர் பள்ளிவாசல் முன்புறம் அமைந்துள்ள கொடிக் கம்பத்திலும், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கொடிக் கட்பத்திலும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில் இரவு 7.30 மணியளவில் சக்கராப்பள்ளி சித்திக் பஜாரில் அமைந்துள்ள கொடி கம்பத்திலும், அய்யம்பேட்டை ஆலிம் சதுக்கத்தில் அமைந் துள்ள கொடி கம்பத்திலும், நகரச் செயலாளர் மோதின், கே.. அப்துல் நசீர், பொருளாளர் ஆர் நூர் முஹம்மது, மாவட்டப் பிரதிநிதி எம். முஹம்மது ஜியாவுதீன், துணைத் தலைவர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் எம்கே.எஸ். பரீத் மற்றும் திரளாக கூடியிருந்த தொண் டர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் பிறைக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இரவு 8 மணியளவில் வடக்குமாங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கொடிக் கம்பத்தில் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ். பஷீருத்தீன் தலைமையில் நகரத் தலைவர் டி.எம். சிக்கந்தர் பாட்சா, பொருளாளர் எம். முஹம்மது சலீம், துணைத் தலைவர் எம்.. அப்துல் அலிநூரி, கே.எம். முஹம்மது ஜியாவுத்தீன், மாவட்டப் பிரதிநிதி . அல்ஹாஜ் எஸ்.பி நூர்தீன் திரளாக இருந்த ஜமாஅத் தார்கள் முன்னி லையில் பிறைக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இரவு 8.30 மணிக்கு பண்டாரவாடை பேருந்து நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்திலும், பள்ளிவாசல் கடைத் தெருவில் அமைக்கப் பட்டிருந்த கொடி கம்பத்திலும், நகரப் பொருளாளர் எம்.பி. ராஜா முஹம்மது தலைமையில் நகரச் செயலாளர் பி.. ஹாஜா மைதீன், துணைச் செயலாளர் எம்.ஜே. முஹம்மது கனி, மாணவர் பேரவை எம். முஹம்மது ஆரிப் மற்றும் இளைஞர் லீக், தொழி லாளர் அணி தொண்டர்கள் முன்னிலையில் கொடி ஏற் றப்பட்டது.

இரவு 9 மணியளவில் ராஜகிரி மெயின் ரோட்டில் நகரப் பொறுப்பாளர் பி... முஹம்மது அலி தலைமையில் அப்துல் லத்தீப், ஷபீர் அஹமது, முஹம்மது ஆசிக், முஹம்மது முஸ்தபா, முஹம்மது ரபீக், ஹாஜா மைதீன், கமாலுதீன் மற்றும் தொண்டர், மாவட்ட குழுவினர்களை வரவேற்றபின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடி ஏற்றும் நிகழ்ச்சி 9-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு முடிவுற்றது

Post a Comment

0 Comments