வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் 467-வது வருடாந்திர கந்தூரி விழா

அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி1433 ஜமாத்துல் அகீர் பிறை 14க்கு 05.05.2012 சனிக்கிழமை-ஞாயிறு இரவு எங்கள் சங்கைக்குரிய மஹான் ''ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ்'' அவர்களின் 467-வது வருடாந்திர ஹந்தூரியை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து
பாத்திஹா தருதில் கலந்துகொண்டு ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.
வழுத்தூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
ஜமாத்துல் அகீர் பிறை 1
22.04.2012 ஞாயிறு மாலை                  கொடியேற்றுதல்
22.04.2012 திங்கட்கிழமை இரவு        மெளலூது ஷரீபு ஒதுதல் அரம்பம்
22.04.2012 திங்கட்கிழமை இரவு முதல் பிறை 1ன்றிலிருந்து பிறை 13 வரை
மஃரிபுக்குப் பிறகு சிறப்பு பயான் நடைபெறும்

ஜமாத்துல் அகீர் பிறை 14
05.05.2012 சனி-ஞாயிறு இரவு         மெளலூது ஷரீபு ஓதி முடித்தல்.
05.05.2012 சனி-ஞாயிறு இரவு         சந்தனக்கூடு புறப்படுதல் வழுத்தூர்                                               ரிபாயி  பக்கீர்மார்களுடன்
06.06.2012 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாபூத்து என்னும் சந்தனக்கூடு வந்து ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரிபுக்கு சந்தனம் பூசுதல் காலை 7.30 மணிக்கு
துஆ ஓதி தப்ருக்(சாப்பாடு) வழங்கப்படும்..

Post a Comment

0 Comments