நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.
நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது.
மொத்தம் போட்டியிட்ட 394 இடங்களில் 45 இடங்களில் மட்டுமே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களிலும் தனித்தே போட்டியிட்டு சமுதாய மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலில் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் களத்தை சந்தித்தது.
தாய்ச்சபை ஊழியர்களின் மன உறுதியினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரை காப்பாற்ற வேண்டும், தாய்ச்சபையின் தனித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்திட தேர்தலை சந்தித்தனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பண பலம், படை பலத்தோடு தேர்தலை சந்தித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் சமு தாயத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தங்களுக்கு இருக்கும் நல்மதிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்தித்தனர்.
போட்டியிட்ட 394 இடங்களில் 115 இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றது.
வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவரம் வருமாறு:
1) வழுத்தூர் - தமிழ்ச் செல்வன் 2) வல்லம் - திவான் ஒலி 3) குர்னிகுளத்துப்பட்டி தேவர்மலை -அப்துல் மஜித் 4) திருச்சி இனாம்குளத்தூர் - மும்தாஜ் பேகம் 5) விழுப்புரம் கானை - ஏ. பரீதா பேகம் 6) நெல்லை பத்தமடை - அல்லாபிச்சை 7) இராமநாதபுரம் செம்பட்டையார்குளம் - எஸ். பிலாலுதீன் 8) இராமநாதபுரம் பெருநாழி- அப்துல் ரஜாக் 9) நெல்லை சம்மன்குளம் - டி.பி.எம். ரெசவு முஹம்மது 10) நெல்லை பொட்டல்புதூர்- ஏ. ஹஸன் பக்கீர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........