நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு பிரீபெய்டு முறையில் மின்சார கட்டணம் செலுத்தலாம் என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
image source google
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நேற்று ஜூன் 30 மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது. செல்போனில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது போல் இனி மின்சார கட்டணத்தையும் அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து, ரீசார்ஜ் தொகைக்கு ஏற்ப மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்
இதற்காக நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும் பிரீபெய்டு முறையில் மின்சார பயன்பாட்டை நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சரவை கூறியுள்ளது
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........