தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை (ஜூன் 2) பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சற்றுமுன் மாணவர்களின் உடல்நலன் கருதி நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா என்பது குறித்து நாளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
நாளைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா? ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........