வானில் மிக அரிதான 'ரத்த நிலா' வரும் 26ம் தேதி தெரியும்' என கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ரத்த நிலா என்று தெரியும்
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், வரும் 26ம் தேதி பவுர்ணமி தினத்தன்று நிகழ உள்ளது. இந்த அரிதான சந்திர கிரகணம், மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளது.
இந்த கிரகணத்திற்குப் பின், நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். இதை 'ரத்த நிலா' என்றழைக்கிறோம்.
சந்திர கிரகணம் என்றால் என்ன
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறோம்.
மேலும் பவுர்ணமி நாளில் மட்டுமே இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.
ரத்த நிலா எந்த நாடுகளில் பார்க்கலாம்
கிழக்கு ஆசியா,
ஆஸ்திரேலியா,
அமெரிக்கா
இந்தியாவில் கல்கத்தாவில் மாலை 6:15 முதல் 6:22 மணி வரை இந்த ரத்தநிலா சந்திர கிரகணத்தை காணலாம்.
எதனால் இந்த ரத்தநிலா ஏற்படுகின்றது
பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக இது ஏற்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு நாசாவின் அறிவிப்பை பார்க்கவும்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........