புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ள அறிவிப்பில்....
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவையைத்தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றது.
அத்தியாவசிய பொருள்களை மக்கள் இடைவெளி விட்டு வாங்கிச் செல்லும் அளவிற்கு மதியம் 12 மணிவரை அந்த கடைகள் இயங்குகின்றன.
மக்களுக்கு தினமும் காய், பழங்கள் உட்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்புக்குத் தேவை என்பதால் இந்தக்கடைகள் 12 மணிவரை திறந்திருக்கிறது.
இதை பயன்படுத்தி மக்கள் கூட்டம் கூடாமல் இடைவெளி விட்டு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி வாங்கிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பால், மருந்து போன்றவைகளுக்கு தடையில்லை. பொதுமக்கள் தேவையான அத்தியாவசியப்பொருள்களை தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள கடைகளில் வாங்கி அதிக தூரம் சாலையில் பயணிப்பதை தவிர்க்கவும்.
பொதுமக்கள் நலன் கருதியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா தாக்கம் சற்றே குறைய ஆரம்பித்து இருக்கின்றது.
இது பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது. எனவே பொதுமக்கள் துணையோடு ஏற்கனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை தொடரும்.
நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும். விரிவான அரசாணை வெளியிடப்படும். என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........