திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் திருமண மண்டபத்திற்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்து பூட்டினார்.
கரோனா தொற்று பரவி பெரும் சேதத்தையும், உயிர் பலியும் ஏற்படுத்தி விடாமல் இருக்க, தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. கடும் வெயிலையும்
பொருட்படுத்தாமல் காவல் துறையினர் சாலையில் நின்று பாதுக்காக்கின்றனர்.
மருத்துவமனைகளில் உயிரை துச்சமாக மதித்து மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவ சேவை செய்கின்றனர். நகராட்சியின் அனைத்து இடங்களிலும் நகராட்சி ஆணையர் மற்றும் பணியாளர்கள் நேரில் ஆய்வு செய்கின்றனர்.
தொற்று பாதித்த வீடுகளிலும் உள்ளே நுழைந்து அந்த இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் திருமண மண்டபத்தில் படு அமர்க்களமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
லெட்சுமாங்குடி பாலத்தருகே, நகராட்சி ஆணையர் ஆர்.லதா, சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, கொரடாச்சேரி சாலையிலிருந்து, ஆண்களும், பெண்களுமாக கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம்,ஆணையர் விசாரித்த போது, நாகூரார் திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதும், கறி விருந்து நடப்பதும் தெரிய வந்தது. உடன், திருமண மண்டபத்துக்கு ஆணையர் லதா சென்றார்.
அங்கு, ஒரு பக்கம் மணமகன், மணமகளுக்கு திருமணச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. மறுபக்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அனைவரையும் வெளியேற்றி விட்டு, திருமண மண்டபத்தை பூட்டி, சீல் வைக்கப்பட்டது.
மேலும், விதி மீறலுக்காக ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டன.
இதுகுறித்து, ஆணையர் லதா கூறியது, தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை, பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும். கரோனா தொற்றிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால், நாம் தனிமையில் இருந்தால் தான் நடக்கும் என்றார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........