கொரோனா இரண்டவது அலை தொற்றில் கர்நாடகா மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு தினமும் 30,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கிறது. கடந்த 17 நாட்களில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது கொரோனா. பெங்களூரு நகரில் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கொரோனா தாக்கம் காரணமாக 24-ம் தேதி வரை கர்நாடகாவில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் அடுத்த மாதம் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் முதல்வர் எடியூரப்பா கூறினார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........