5 மாநில அகதிகளுக்கு குடியுரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் : மத்திய அரசு

 குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை மத்திய அரசு இன்னும் வகுக்காத நிலையில், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள அகதிகள் தற்போதைய விதிகளின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல நாடுகளில் இருந்து ஏராளாமானோர்  பல ஆண்டுகளாக அகதிகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் குடியுரிமை வழங்கப்படும். தஞ்சம் புகுந்துள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவில் தங்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். பிறகு அவர்கள் இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற கடந்த 1995 மற்றும் 2009ல் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019ல் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 

இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் இல்லை அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்தன. கொரோனா சூழல் சீரானதும் இச்சட்டத்திற்கான விதிகள் அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு தற்போதைய விதிகளின் கீழ் குடியுரிமை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த அகதிகள் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்புகள் குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2009 ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments