புதுதில்லி: ஏர் இந்தியா இணையதளத்தில் 45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட முழு விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணித்த 45 லட்சம் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள், தொடர்புத் தகவல் உள்ளிட்ட தரவுகள் கசிந்துள்ளதாக இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 மற்றும் 2011 முதல் பிப்ரவரி 3 முதல் 2021 வரை பதிவு செய்யப்பட்டிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
இதுதொடர்பான முதல் அறிவிப்பு பிப்.25 ஆம் தேதி பயணிகளின் விவரங்களை சேமிக்கும் நிறுவனத்தின் டேட்டா பிராசசர் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. இந்த சம்பவத்தால் உலகம் முழுவதும் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கிரெடிட் கார்டு சிவிவி எண், ரகசிய எண் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரகசிய எண்ணை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தொடர்பான தரவு கசிவு மற்றும் பாதுகாப்பு சம்பவம் குறித்து நிபுணர்கள் விசாரித்து பயணியாற்றி வருவதாகவும், நிறுவனத்தின் சர்வரின் சேவைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........