தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டு 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மே-6 ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத்தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.
தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவும் வழங்க வேண்டும்.
உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை.
காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
சனி,ஞாயிறு இறைச்சி கடைகள் முழுமையாக மூடவும், மற்ற நாட்களில் 6மணி முதல் 12மணி வரை இயங்கவும் உத்தரவு
நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.
ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.
ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி.
பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம்.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.
சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை.
திறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லை.
ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
நோய் பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........