நமது பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 80 வயதிற்க்கு மேற்ப்பட்டோர் தங்கள் வீட்டில் இருந்தப்படியே தபால் வாக்கு செலுத்தினார்.

ஏப்ரல் 6 நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்ப்பட்டோர் வாக்கு சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தும் போது கொரோனா தொற்று எற்ப்படும் அபயம் உள்ளதால். 80 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் & தங்களுக்கு தபால் வாக்கு வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் என தகுதியுடையவர்களுக்கு 31-03-2021 முதல் தபால் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதில் பாபநாசம் தொகுதியில் உள்ள ஏரளமானோர் குறிப்பாக நமது வழுத்தூர் மற்றும் சரபோஜிராஜபுரம் ஊராட்சியை சேர்த்து பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படியே வாக்கு செலுத்தினர். இதில் தேர்தல் அலுவலர், துணை அலுவலர், காவலர், வீடியோ எடுக்கும் நபர் மற்றும் அந்த அந்த வாக்கு சாவடி முகவர்கள் கலந்த்துக்கொண்டு குறிப்பிட்டுள்ள வீடுகளில் வாக்குகளை சேகரித்தனர்.

Post a Comment

0 Comments