வழுத்தூர் - கத்தார் சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்..!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு வழுத்தூர் சகோதரர்கள் சந்திப்பு நேற்று (06.12.2019) அன்று மாலை ஷாலிமார் பேலஸ் ரெஸ்டாரண்ட்டில் நடந்தது. சுமார் 35 நண்பர்கள் கலந்து கொண்டனர்.

சகோதரர் சமீர் தொகுப்புரை வழங்க, சுஜாயத் வரவேற்புரை நிகழ்த்த, குழும பெரியோர்கள் வாழ்த்துரை வழங்க, ஜுபையர் குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கத்தையும் விளக்க, சகோதரர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களை வழங்க, பஜ்லுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி விழாவை சிறப்புற நடந்தது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

குழும பெயர் - கத்தார் வழுத்தூர் சமூக நல அமைப்பு - கத்தார் - Qatar valuthoor welfare Association - QVWA
குழும தலைவர் - சகோதரர் பிர்தௌசி
செயலாளர் - சகோதரர் ஜுபையர்
பொருளாளர் - சகோதரர் ஜாசிம்
கீழ்வரும் செயற்பாடுகள் இன்ஷா அல்லாஹ் செய்வதாய் முடிவு செய்யப்பட்டது

1. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்துவது
2. அவசர கால மருத்துவ உதவி செய்வது

Post a Comment

0 Comments