ரதயாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதித்ததை கண்டித்து இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLAகோசங்களை எழுப்பியபடியே சபாநாயகர் இருக்கைக்கு எதிரே சென்று தன்னை பேச அனுமதிக்குமாறு கோரினார்.
அவர் தொடர்ந்து அனுமதி மறுத்ததால் அவரும், தனியரசும் வெளி நடப்பு செய்தனர் அவர்களை தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்தனர்.
வெளிய வந்த மு.க.ஸ்டாலினுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி கைக் கொடுத்து நன்றி கூறினார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள் 144 தடை உத்தரவு தமிழ் கூட்டமைப்புக்கு மட்டும்தானா? ரதயாத்திரைக்கு இல்லையா? என்றார்.
கைது செய்யப்பட்ட திருமாவளவன், சீமான், ஜவாஹிருல்லாஹ், வேல்முருகன், ஹாருண்ரஷீத், பாண்டியன், தெஹ்லான்பாகவி, புளியங்குடி செய்யது அலி, உள்ளிட்ட 2ஆயிரம் பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........