பாருங்கள் நமது சமுதாயத்தின் ஒற்றுமையை... நாம் இனி என்ன செய்ய வேண்டும்??

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
4. தமிழ் மாநில தேசிய லீக் ( அல்தாப் )
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக் ( ஷேக் தாவூத் )
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான் )
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன் )
8. மனிதநேய மக்கள் கட்சி
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் ( பாலை ரபீக் )
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி ( குத்புதீன் ஐபக் )
19. தேசியலீக் கட்சி
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் ( இணையதளம் )

23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி ( சித்தீக் )
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா ( அர்ஷத் மதனி )
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் ( லியாகத்அலிக்கான் )
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை ( ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி )
40. மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் ( உமர் பாருக் )
41. மறுமலர்ச்சி த மு மு க
42.ஹாமிது பக்ரியின் ஐக்கிய சமாதான பேரவை (குறிப்பு மேலும் ஒரு புதிய கட்(சீ) துவக்கம்)
இன்னும்...இருக்கின்றன..
விளங்கிடும் சமுதாயம் !
நீங்க அனைவரும் முதலில் தம் சுயநலம் துறந்து பாவப்பட்ட இந்த சமுதாய நலன் கருதி இந்த தேர்தலுக்காவது ஒன்னு சேருங்க...உங்க கொள்கைகளை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க..
நீங்க மட்டும் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் ஒன்று திரண்டு வெற்றி பெறும் என நம்பும் கூட்டணியுடன் இணையும் பட்சத்தில் நிச்சயமாக குறைந்தது 40 தொகுதிகளைபெற்று வென்றெடுக்க முடியும்..
சரியான கூட்டணி அமையாத பட்சத்தில் 234 தொகுதிகளிலும் , முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகள் தவிர்த்து, போட்டியிட்டு நம் வாக்கு வங்கியை உலகுக்கு எடுத்து காட்டுவோம்..
செய்வீர்களா உடனே??
பூனைக்கு மணி கட்டுவது யாரென்ற கேள்வி எழுமானால் என்னைப் போன்றோர் அதற்கான ஏற்பாட்டிற்கு களம் இறங்க தயாராக இருக்கிறோம்..
எப்படி அனைத்து முஸ்லிம் மக்களையும் ஒன்று சேர்ப்பது என்று யோசிக்கிறீர்களா?
வெகு சுலபம்..இதற்கான பணியை அனைத்து ஊர்களிலும் உள்ள ஜமாத்துகள், பள்ளி இமாம்கள் மூலம் செய்ய முடியும்..அதற்காக சரியான வழியில் திட்டமிடுவோம்..
மறந்து விடாதீர்கள்..14 சதவிகித ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு யாருக்கு வந்த விதியோ என மவுனம் காப்பது முட்டாள் தனம்..கையாளாகாத தனம்..
இங்கு 2% ஓட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு சாதியினரும் பேசும் பேரத்தை பார்த்தாவது நாம் நம்மை இப்போதாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போது கூட நீங்கள் ஒற்றுமையுடன் செயல் படவில்லையெனில் நாளைய இஸ்லாமிய சமுதாயம் உங்களை காறித் துப்பும்..அதில் நானே முதல் ஆளாய் முன் நிற்பேன்..
ஒரு அரசியல் கட்சியில் இருந்து கொண்டு இதை நீ கேட்கலாமா? என்பீர்கள்..நம் சமுதாய மக்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வைப்பவர்கள் தான்..சமுதாய நலன் கருதி நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். முதலில் நீங்கள் ஒன்றுபடத் தயாரா??
நண்பர்கள் இக் கோரிக்கையை மேற்கண்ட கட்சிகள், அமைப்புகளுக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள்..லைக் கூட வேண்டாம்..அனைவருமே இதை ஷேர் செய்யுங்க..
அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதை அடுத்து தெரிவிக்கிறேன்..
இதை அனைத்து அமைப்புகளுக்கும் உடனடியாக கொண்டு செல்லவும்.

Post a Comment

0 Comments