மத்திய கோல்பீல்டு நிறுவனத்தில் பணி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் பிரசித்தி பெற்று விளங்கும் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் கோல்பீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: சிவில் ஓவர்சியர் - 09, எலக்ட்ரிகல் - அஸிஸ்டெண்ட் போர்மேன் - 251, நான்-எக்ஸிக்யூடிவ் எலக்ட்ரீசியன் டெக்னீசியன் - 319

வயதுவரம்பு : 30.10.2013 தேதிப்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில் ஓவர்சியர் பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதர பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இவற்றுடன் அப்ரெண்டிஸ் பயிற்சி, சிறப்பு சான்றிதழ் போன்றவை கூடுதலாக பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளைகளில் "Central Coalfields Limited'' என்ற பெயரில் ராஞ்சியில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The General Manager (Recruitment), Recruitment Department, 2nd Floor, Damodar Building, Central Coalfields Limited, Darbhanga House, Ranchi834029''

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Post a Comment

0 Comments