அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹமது அவர்கள் தலைமை தங்கினார். செல்வி R.திவ்யா M.A.B.Ed., அவர்கள் வரவேற்று பேசினார்கள். முதல்வர் K.இளங்கோவன் அவர்கள் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு அறிக்கைளை சமர்ப்பித்தார்.மெளலானா மெளலவி அல் ஹாபிழ்
அஹமது ஜலாலுதீன் ஹழரத் அவர்கள், ஆலிமான் R.M.ஜியாவுத்தீன் அவர்கள்
B.நஸ்ரத் இலியாஸ் அஹமது D.Pharm அவர்கள், சிறப்புரையாற்றி அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மற்றும் பள்ளி தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இறுதியில் B.முஹம்மது அஸ்லம் B.E அவர்கள் நன்றி கூறினார்கள். விழாவினை திருமதி K.M.கவிதா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.




மேலும் புகைப்படங்களுக்கு கிளிக்:
www.alifmatric.blogspot.com

Post a Comment

0 Comments