வழுத்தூருக்கு பெருமை சேர்க்கும் செய்தி..!

திரு. M.J. முகமது இக்பால் (தலைவர், மேலாண்மை இயக்குனர் THOSIBA ELEVATOR MIDDLE EAST) அவர்களுக்கு, தம்முடை தொழில் சார்ந்த நிறுவனத்தை புதிய அணுகு முறைகளோடு சிறப்பாக திறம்பட செயல் ஆற்றியமைக்கும், பல்வேறு சமுக சேவைகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டதற்கும் பாராட்டி மிக உயரிய “MEDIAGUILD” என்ற விருதை சென்னை RVK STUDIOS, RED CARPET அரங்கில் தமிழக ஆளுனர் மேதகு திரு. ரோசையா அவர்கள் வழங்கினார்கள். இவரோடு பேராசிரியர் டாக்டர் தாண்டவம் (vice chancellor Madras University), டாக்டர் கனகசபை (Deen, Madras Mdecial College), டாக்டர் ஸ்ரீனிவாசன் ( senior scientist ISRO), ஜீ தமிழ் “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் தங்க மீன்கள் பட இயக்குனர் டாக்டர் ராம் ஆகியோரும் விருதை பெற்று கொண்டார்கள். அரங்கு நிறைந்து சிறப்பாக நடந்த இந்த வண்ணமிகு விழாவில் N. வசீகரன் ( Editor in chief Chennai Metro) மற்றும் பல செய்தியாளர்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். விருது பெற்ற திரு முகமது இக்பால் அவர்கள் மேலும் பலசேவைகள் செய்து நீண்ட ஆயுளுடன் நிறைந்து வாழ வாழ்த்துகிறேன்.

Post a Comment

0 Comments