வழுத்தூர் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா அழைப்பு

நாள்: 01-02-2013 வெள்ளிக்கிழமை 
நேரம்: மாலை 5.00 மணி முதல் இரவு 9.15 மணி வரை 
இடம்: முஹையத்தீன் ஆண்டவர்கள் ஹனபீ பெரிய பள்ளிவாசல்,
வழுத்தூர்.
தொடக்க உரை: ஹாஜி.லயன்.A.பஷீர் அஹமது அவர்கள்
 (மாவட்ட செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 
தலைமை அல்ஹாஜ் P.S.ஹமீது (மாவட்டத் தலைவர், இ.யூ. முஸ்லிம் லீக்) 

வரவேற்புரை: ஆலிமான் R.M.ஜியாவுதீன் (மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்,இ.யூ. முஸ்லிம் லீக்) 
சிறப்புரை: மெளலவி M.தாஜுதீன் அஹ்ஸனி 
(முதல்வர் அல் ஜாமி உல் அன்வார் அரபிக் கல்லூரி, 
திருவிடாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்) 
தலைப்பு: “குர் ஆன் ஹதீஸ் வழியில் மிலாதுந் நபி விழா
நிறைவு பேருரை தாய்சபையின் தலைமகன், முனீருல் மில்லத் 
K.M.காதர் மொகிதீன் M.A., Ex.MP அவர்கள் 
(தேசிய பொதுச் செயலாளர் & மாநிலத்தலைவர், இயூ முஸ்லீம் லீக்)
நன்றியுரை: ஜனாப்.M.இஸ்மாயில் கனி M.C.A., 
அனைவரும் வருக..! இறையருள் பெருக...!

Post a Comment

3 Comments

  1. அண்ணல் நபியை புகழாமல்,--இந்த,
    மண்ணில் யாரை நான் புகழ்வேன்?
    நாயகத்தை போற்றாமல்,---எந்தன்,
    நாவால் எவரை போற்றிடுவேன்?

    இரவில் நபியை சிந்தித்தால்,--அந்த,
    இரவே வெளிச்சமாகிவிடும்!
    பகலில் நபியை யோசித்தால்,--அந்த,
    பகலே புனித மாகிவிடும்!
    தனிமையில் நபியை ,நினைத்திருந்தால்,--அந்த,
    தனிமை,தனியோன் கவனம் பெறும்!--
    அனைவரும் கூடி போற்றி நின்றால்,--கூடும்,
    அரங்கம் சுவனமாய் ,மோட்சம் பெறும்!

    பூக்களின் அருகே பேசி நின்றால்,-அவை,
    பூரித்து வாசம் கொப்பளிக்கும்!
    மரங்கள் அருகே பேசி வந்தால்,--அந்த,
    மரங்கள் தப்ரூக் கனி கொடுக்கும்!
    கடலின் அருகே பேசி வந்தால்,--அவை,
    கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கும்!
    மலைகளின் உச்சியில் பேசிநின்றால்--அது,
    மௌனமாய் வாய் பொதி,ரசித்திருக்கும

    பெருமான் நபியை எழுதாத,--எந்த,
    பேனாவும் நரகின் திசை நடக்கும்!
    அருமை நபியை அறியாத,--எந்த,
    அறிஞரின் அறிவிலும் குறை இருக்கும்!
    கண்ணிய நபியைப் பதியாத,--வெள்ளைக்,
    காகிதம் கருத்தை இழந்திருக்கும்!
    உம்மி நபியை பின்பற்றா--இந்த,
    உலகம் வீழ்ச்சிக்கு அருகிருக்கும்!

    எட்டுத்திக்கும் நீ சென்று,--நம்,
    ஏந்தல் நபியின் புகழ் பேசு!
    பிரபஞ்சத்தின் முடுக்கெல்லாம்,--நம்,
    பெருமான் பெருமை நீ நிரப்பு!
    காற்றும் செல்லா இடம் சென்று,
    க்ஹாதம் நபியின் கதை பேசு!
    அற்ப வாழ்வை நபி புகழால் ,--ஓர்,
    அற்ப்புத வாழ்வாய் நீ மாற்று!

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........