பள்ளிக் கல்வித்துறையின் புதிய இணையதளம்

அரசியல் மாற்றங்களினால் சில நேரங்களில் ஒரு சில பொதுவான மாற்றங்களை நாம் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம்.

பள்ளிச் சீருடைகள்(School Uniform), பள்ளிப் பாடப்புத்தகங்கள் (School Text Books), அரசுப் பேருந்து வண்ணங்கள்(Government bus color), அரசு அலுவலக கட்டிட நிறங்கள் (Tamil Nadu Government offices) என நிறைய மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம்.

அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள். பள்ளிக் கல்வித்துறை இணையதளமான pallaikalvi.in என்ற முகவரி முழுவதுமாக முடக்கப்பட்டு புதிய முகவரிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. 

புதிய பள்ளிக் கல்வித் துறையின் புதிய முகவரி http://tnschools.gov.in/

தளத்தின் வடிவமைப்பில் ஒரு சில மாற்றங்களையும் பார்க்க முடிகிறது.



இந்த tnschools.gov.in தளத்தின் மூலம் பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். அத்தோடு பள்ளிக் கல்வித்துறையால் அறிவிக்கப்படும் புதிய அறிவிப்புகள் (Announcement), மாற்றங்கள் (changes), செய்திகள் (news), புள்ளிவிவரங்கள் (statistics), Welfare Schemes ஆகியவற்றை பற்றி உடனுக்குடனேயே இத்தளத்தின் மூலம் அறியப் பெறலாம்.

Post a Comment

0 Comments