பாலிய முஸ்லிம் சங்கம் 100-ம் ஆண்டை அடியடுத்து வைக்கிறது..!

 பெருமைபடுவோம்.... நமதூர் பள்ளி நாம் பெற்றோர் படித்த பள்ளி நமது சகோதரர்கள் படித்த பள்ளி நமது உறவினர்கள் படித்த பள்ளி நாம் படித்த பள்ளி நமது சந்ததியர் படிக்க போகும் பள்ளி இன்று நூற்றாண்டு கொண்டாடுகிறது.

நினைத்து பார்ப்போம்.... நமது இனிமையான அந்த பள்ளி பருவத்தை, தோழமையோடு கற்பித்த ஆசான்களை, வேற்றுமை மறந்து கவலை என்ற வார்த்தையை நமது அகராதிக்குள் சேர்க்க அனுமதிக்காத நமது பள்ளி தோழர்களை, கல்வியை மட்டுமின்றி உலகத்தை கற்பிக்க அனுமதித்த நிர்வாகத்தினரை...

கரம் சேர்ப்போம்.... நமக்காக நமது முன்னோர் கொடுத்த இந்த பொக்கிஷத்தை நாம் நமது சந்ததிகளுக்கு கொடுத்து இந்த பள்ளியை ஒரு கல்லூரியாக மாற்றி அடுத்த நூற்றாண்டுக்குள் ஒரு பல்கலைக்கழகமாக மாற எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்வோம்.

நன்றி..!
ஆஷிக் முஹைதீன் முஹம்மது அபூபக்கர்
(முன்னால் பள்ளி மாணவன்)




Post a Comment

0 Comments