எண்ணற்ற வேலைவாய்ப்புகளை தரும் இயந்திர பொறியாளர்(MECHANICAL ENGINEER) படிப்பு

டூல்கள், மெஷின்கள், பிற மெக்கானிக்கல் உபகரணங்களோடு தொடர் புடைய இன்ஜினியரிங் பிரிவு தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழிற்துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகளைக் கொண்டிருப்பதும் இது தான். இந்த இன்ஜினியரிங் பிரிவைச் சார்ந்தே பல இன்ஜினியரிங் பிரிவுகளும் இயங்குகின்றன.

இத்துறையினர் புதிதாக உபகரணங்களை வடிவமைப்பது மட்டுமின்றி அவற்றுக்கான பொருட்களையும் தயாரிக்கிறார்கள். மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், டிவிடிக்கள் என அனைத்துப் பொருட்களின் தயாரிப்பிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவினருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

பொதுவாக மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவரின் பணி என்பது சவால்கள் மிகுந்ததாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருப்பதைக் காணலாம். ஐ.டி திறன், டிசைனிங் மற்றும் பகுத்தாராயும் திறன்களையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் வணிக ரீதியாக சாத்தியமானவைகளாக இருப்பதையும் அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆட்டோமொபைல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் ஆலைகள், எண்ணெய் சுரங்கங்கள், சுத்திகரிப்பு, ராணுவத்தின் டெக்னிக்கல் பிரிவுகள், விண்வெளி ஆய்வு என எதில் தான் இவர்களுக்கான தேவை இல்லை? அரசுத் துறை நிறுவனங்களிலும் இவர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள்.

ரயில்வே, தபால் துறை, பாதுகாப்பு, பொதுப் பணித் துறை, ஏரோநாடிகல், விவசாயம், கெமிக்கல் என பல துறைகளிலும் இவர்களுக்கான தேவை எப்போதும் காணப்படுகிறது. ரொபோடிக்ஸ்,சி.ஏ.டி., பயோமெக்கானிக்ஸ், ஆட்டோமேஷன், தெர்மல் இன்ஜினியரிங், சிஸ்டம்ஸ் அண்ட் டிசைன் இன்ஜினியரிங்,மெட்டீரியல்ஸ் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்றவற்றிலும் இவர்கள் பணி புரிகிறார்கள்.

Post a Comment

5 Comments

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன்.நன்றி பகிர்வுக்கு.
    http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_18.html

    ReplyDelete
  3. அன்பின் மொஹமது அஸ்லாம் - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - நல்லதொரு தகவல் தரும் பதிவு - பயனுள்ள பதிவு - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........