வழுத்தூரில் மிலாது நபி விழா...!

 அஸ்ஸலாமு அலைக்கும்...!
வழுத்தூரில் மிலாது நபி விழா இன்று (1-2-2013) சிறப்பாக நடைபெற்றது... அஸர்  தொழுகைக்கு தொடங்கியா மீலாது விழாவில், மெளலவி.ஹாஜி.M.ஹபிபுல்லாஷா (இமாம், முஹைய்யத்தீன் ஆண்டவர்க்ள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள் கிராத் ஓதி விழவினை தொடங்கி வைத்தார்கள். அலிமான் R.M.ஜியாவுதீன் அவர்கள் வரவேற்புரையற்றினார்..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட தலைவர் அல்ஹாஜ்.P.S.ஹமீது அவர்கள் தலைமை தங்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள் தொடக்க உரையற்றினார்..

கருத்துரை தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள், மெளலவி K.M.ஜலாலுதீன்  பாகவி (இமாம், ஹவ்வா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள், ஜனாப் F.அப்துல் கரீம், மெளலவி ஆரிப் மன்பஈ (இமாம், மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள், மெளலவி ஹாபிஸ் அஹ்மது ஜலாலுதீன் உலவி (இமாம், ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள், K.Z.இனாயத்துல்லாஹ் அவர்கள், S.S.B.நஸ்ருதீன் அவர்கள், அனைவரும் மீலாது நபியின் மகிமையை எடுத்து கூறினார்.
மெளலானா மெளலவி M.தாஜுதீன் அஹ்ஸனி
(முதல்வர் அல் ஜாமி உல் அன்வார் அரபிக் கல்லூரி,
திருவிடாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்) அவரகள் “குர் ஆன் ஹதீஸ் வழியில் மிலாதுந் நபி விழா” என்ற தலைப்பில் எழுச்சி மிகு கருத்துகளை கூறினார்கள்... விழாவின் நிரைவு பேருரையாக தாய்சபையின் தலைமகன், முனீருல் மில்லத் K.M.காதர் மொகிதீன் M.A., Ex.MP அவர்கள் (தேசிய பொதுச் செயலாளர் & மாநிலத்தலைவர், இயூ முஸ்லீம் லீக்) அவர்கள் மிலாது நபி ஏன் நடத்த வேண்டும், மிலாது நபியின் சிறப்புகள் பற்றி அழகாக எடுத்து கூறினார்கள்...
விழா முடிவில் M.இஸ்மாயில் கனி M.C.A அவர்கள்  ருகையா அமீர் அறக்கட்டளை சார்பாக நன்றியினை தெரிவித்தார்...
விழாவினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிவகங்கை மாவட்ட செயலாளர் K.Z.இனாயத்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்கினார்..
விழாவில் சுன்னத் ஜமாத் இளைஞர்கள், ஜமாத்தார்கள், சுன்னத் ஜமாத்தினார்கள், பெண்கள், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு  விழாவினை சிறப்பித்தனர் இன்ஷா அல்லாஹ் ஓளிப்பதிவு நமது இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்...






























































































































Post a Comment

7 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........